27 நக்ஷத்திரங்கள் :: செய்ய வேண்டியவையும் / செய்யக்கூடாதவையும் 27 Nakshathra :: do and donts

சமிக்ஞை

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் கடன் கொடுத்தலையோ, பிரயாணம் செய்வதயோ தவிர்க்க வேண்டும்.

சதுர்தசியிலும், ஞாயிறு செவ்வாய், சனி கிழமைகளிலும் வீட்டிற்கு சுண்ணாம்பு அல்லது பெயிண்ட் பூசுவதை தவிர்க்க வேண்டும்.

லக்னத்தில் குரு இருக்கும் நேரத்தில் தங்கம், இரத்தினங்கள் ஆகியவற்றை வாங்குவது விருத்தியளிக்கும்.

புதன் கன்னியில் இருக்கும் போதோ அல்லது வியாழக்கிழமையில் இருக்கும்போதோ, பத்திரங்கள் பதிவுசெய்தல், புத்தகங்கள் வாங்குதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவைகள் செய்யலாம்.

ரோகிணி நட்சத்திரம் வரும் சனிக்கிழமையில், குரு மிதுனம் சிம்மம் துலாம் ஆகிய ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும் வேளையில் வெள்ளிப்பொருட்கள் வாங்குதல் நன்மையளிக்கும்.

அசுபதி, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம், பூசம், உத்ரம், அஸ்தம், மூலம், உத்ராடம், சதயம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் விற்பனை செய்தல், கொடுத்தல் மற்றும் வாங்குதல் நன்மைகள் தரும்.

அசுபதி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், உத்ராடம், அவிட்டம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புதிய ஆடை வகைகள் அணிதல் மற்றும் வஸ்திரங்கள் தரித்தல் நன்மையளிக்கும்.

அசுபதி, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், உத்ராடம், திருவோணம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோக ஆபரணங்கள் அணிவது நன்மையளிக்கும்.

சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் வீடு கட்டுதல் தொடர்பான வேலைகள் ஆரம்பித்தால் விரைவில் முடியும்.

ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு கட்டுதலோ அல்லது கட்டப்பட்ட வீட்டிற்கு குடிபோதலோ நன்மையளிக்காது.

திருவாதிரை, பூரம், சுவாதி, அனுசம், மூலம், பூராடம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் தண்ணீர் தேக்கி வைககும் தொட்டிகள் அமைப்பது நன்மையளிக்கும்.

அசுபதி, ரோகிணி, மிருகசிரிடம், மகம், உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் வண்டி மற்றும் வாகனங்கள் வாங்குதல் மற்றும் பழகுதல் நன்மையளிக்கும்.

தொலைதூர பிரயாணங்கள் அசுபதி, மிருகசிரிடம், பூசம், அஸ்தம், அனுசம், திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஆரம்பிக்க சுபமடையும்.

அசுபதி, ரோகிணி, மிருகசிரிடம், புனர்பூசம், பூசம், உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், உத்ராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் உடல் நலக்குறைவிற்கான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது மிகுந்த நன்மையளிக்கும்.

சனிப்பிரதோஷத்தன்று சர லக்னம் உதயமாகும் நேரங்களில் கடன் தொகையில் சிறிதே கொடுத்தாலும், அது முழுக்கடனும் அடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித்தரும்.

ஜன்ம நட்சத்திரம், அனுஜன்ம நட்சத்திரம், திரிஜன்ம நட்சத்திரம், திருவாதிரை, உத்ரம், கேட்டை, திருவோணம், தமிழ் மாதத்தின் முதல் நாள் ஆகிய நாட்களில் எண்ணெய் தேய்த்துக்குளிப்பது, ஆரோக்யம் மற்றும் ஐஸ்வர்யத்திற்கு கேடுகள் விளைவிக்கும்.

ஜன்மராசிக்கு எட்டாது ராசியில் சந்திரன் சஞ்சரிப்பது சந்திராஷ்டமம் எனப்படும். அக்காலங்களில் சுபகாரியங்கள் மற்றும் புதிய செயல்கள் ஆரம்பித்தல் ஆகியவைகள் விலக்கிவைப்பது நல்லது.

ஒரு மாதத்தில் பௌர்ணமி வரவில்லையெனில் அது மலமாதம் எனப்படும். ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வந்தால் அது விஷமாதம் எனப்படும். இவையிரண்டிலும் சுபகாரியங்கள் செய்வதை தவிர்ப்பது நன்று.

உபகிரகங்களான அர்த்தபிரகணன், யமகண்டன், காலன் ஆகியவைகள் உதயமாகும் நேரங்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது அவசியமாகும்.

ஒரு வருடத்தின் கடைசி 15 நாட்களும், மாதத்தின் கடைசி 3 நாட்களும், தேய்பிறையின் கடைசி 6 நாட்களும், வளர்பிறை பிரதமை திதியும் உள்ள நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஒரே நாளில் மூன்று நட்சத்திரங்கள் அல்லது மூன்று திதிகள் வருமானால் அந்நாட்கள் சுபகாரியங்கள் செய்ய ஏற்றதல்ல.

மாந்தி உதயமாகும் நேரத்தில், வாங்குவது மற்றும் விற்பது, பொருட்களை சேமித்து வைத்தல், புதிய ஆபரணங்கள் அணிவது, கடன் தீர்த்து வைப்பது, மருந்து எடுத்துக்கொள்வது, வாசனைத் தைலங்கள் உபயோகிப்பது, தந்திர வித்தைகள் ஆரம்பிப்பது, புது வீடு குடிபோவது ஆகியன நன்மையளிக்கும்.

மிருகசிரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் செடிகள் மற்றும் கொடிகள் நடுவது நல்ல பயன்களைத் தரும்.

அக்னி நட்சத்திரத்தில் விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், தீட்சை பெறுதல், வாகனங்கள் வாங்குதல் பழகுதல் ஆகியவை விலக்கத்தக்கவை.

3 thoughts on “27 நக்ஷத்திரங்கள் :: செய்ய வேண்டியவையும் / செய்யக்கூடாதவையும் 27 Nakshathra :: do and donts

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s