Planets : கிரகங்கள்

சூரியன்

சூரியன் ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலை 1,50,00,000 டிகிரி சென்டிகிரேடு ஆகும். அந்த மையப் பகுதியிலிருந்து சூரியனின் மேற்பரப்பை நெருங்கும் போது வெப்பநிலை 6,000 டிகிரி சென்டிகிரேடாக குறைந்து விடுகிறது. சூரியனின் எடை நமது பூமியைக் காட்டிலும் 3,31,950 மடங்கு அதிகமாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தொலைவு 14,96,00,000 கிலோ மீட்டர்கள் ஆகும். சூரியனின் குறுக்கு விட்டத்தின் நீளம் 13,92,000 கிலோ மீட்டர்கள் ஆகும்.

ஹைட்ரஜனும் (75%), ஹீலியமும்(25%) தான் சூரியனில் அடங்கியுள்ள பொருள்களாகும். பூமியிலிருந்து 9.3 கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கின்றது. சூரிய ஒளி வினாடிக்கு 1,86,400 மைல் வேகத்தில் பயணம் செய்து எட்டேகால் நிமிடங்களில் பூமியை வந்தடைகிறது.

இரும்பு, செம்பு, துத்தநாகம், ஹீலியம் முதலிய தனிமங்கள் சூரியனில் இருக்கின்றன. சூரியனின் ஈர்ப்புச்சக்தி பூமியின் ஈர்ப்பு சக்தியைக் காட்டிலும் 27 மடங்கு அதிகமாகும். அதனால், சூரியனில் உள்ள பொருள் ஒவ்வொன்றும் பூமியிலிருப்பதைக் காட்டிலும் 27மடங்கு கனமுள்ளதாக இருக்கும்.

சூரியமண்டலம் என்று சொல்லப்படும் பகுதியில் அடங்கியுள்ள புதன் முதல் புளூட்டோ வரையிலான கோள்கள் துணை கோள்கள் அஸ்டராய்டுகள் வால் விண்மீன்கள் மற்றும் வாயுக் கூட்டங்கள் ஆகிய அனைத்தைக் காட்டிலும் சூரியன் ஆயிரம் மடங்கு அதிக எடையுள்ளது. சூரிய மண்டலம் என்பது எடையைப் பொருத்தவரையில் 99.9 சதவிகிதம் சூரியனாகவும், 0.1 சதவிகிதம் இதர கிரகங்கள், விண்மீன்களாகவும் உள்ளது.

சூரியனின் மேல் பரப்புகளில் எப்பொழுதும் காணப்படும் பொங்குதல்களும், சூரிய ஜுவாலைகளும் ஏராளமான பொருட்களைப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறிகின்றன. அவற்றில் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போன்ற அணுச் சிதறல்களும் இருக்கின்றன.

புதன்

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் மெர்குரி எனப்படும் புதன் ஆகும்.

இரவில் மைனஸ் 180 டிகிரி சென்டிகிரேட் எனற அளவுக்கு குளிரும் பகலில் 400 டிகிரி சென்டிகிரேட்என்ற அளவுக்கு வெப்பமும் இருக்கும்.

பூமியிலிருந்து புதனைப் பார்ப்பது கடினம். சூரியனின் மிகநெருங்கிய கோள் என்பதால், சூரியஒளி இதை மூடி மறைத்து விடும். சூரியன் மறையும் மாலை நேரத்திலோ, சூரியன் உதயமாகும் காலை நேரத்திலோ மட்டுமே புதனை காண முடியும். இரவு நேரத்தில் புதனை காண முடியாது. சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியன் மறையும் போது , இதுவும் மறைந்துவிடும்.

புதன் சூரியனைச்சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. புதனின் விட்டம் 4,880 கிலோ மீட்டர்.

புதன் கிரகத்திலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து சூரியனைப் பார்ப்பதைக் காட்டிலும் 7 மடங்கு பெரிதாகத்தெரியும். புதன் கோள் சூரியனை ஓர் ஒழுங்கற்ற பாதையில் சுற்றி வருகிறது. இதற்குத் துணைக்கோள் எதுவும் கிடையாது. புதன் கிரகத்தில் மேகங்கள் கிடையாது. அதனால் இக்கிரகத்தில் மழையும் பெய்வதில்லை.

சுக்கிரன்

சுக்கிரன் சூரியனுக்கு அருகில் உள்ள இரண்டாவது கிரகம் ஆகும். சுக்கிரனைச் சுற்றிலும் எப்பொழுதும் அடர்ந்த மேகங்கள் சூழ்ந்து ஒரு போர்வையைப் மூடியிருப்பது போல் காணப்படுகிறது.

அந்த மேகங்கள் அடர் கந்தக அமிலத்தாலானவை. அதன் வளிக்கோளத்தில் கரியமில வாயு மிகுதியாக உள்ளது. அந்த வளிக் கோளமும் மேகத்திரளும் சேர்ந்து சூரிய ஒளியை இழுத்துக்கொள்வதால் சுக்கிரனின் மேற்பரப்பு வெப்பம் இரவும் பகலும் 300 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

ஏனைய பிற கிரகங்களை விட சுக்கிரன் ஒளி மிகுந்த கிரகமாகும். நமது நிலவைப் போலவே சுக்கிரனுக்கும் வளர்வும், தேய்வும் உண்டு. பூமியைக் காட்டிலும் சுக்கிரன் சிறியது ஆகும்.

சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையிலுள்ள தூரம் 10 கோடியே 80 லட்சமாகும். சுக்கிரனின் குறுக்கு விட்டம் 12,100 கிலோ மீட்டராகும்.

சூரியனை ஒரு முறை சுற்றி வர சுக்கிரன் எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை மாதங்களாகும் ( 225 நாடகள் ) . சுக்கிரன் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்கிறது (சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் மற்றொரு கிரகம் யுரேனஸ் ஆகும்) . சுக்கிரன் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகின்றது.

செவ்வாய்

சூரியனிலிருந்து நான்காவது கிரகம் மார்ஸ் எனப்படும் செவ்வாய் ஆகும். செவ்வாயில் இரும்பு ஆக்ஸைடு அதிக அளவில் இருப்பதால் இக்கிரகம் சிவப்பு நிறமாக காணப்படுகிறது.

சூரியனிலிருந்து 22 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. சூரியனை ஒரு முறை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது ( இது நமது பூமியின் சுழற்சி நேரம் போன்றதே!). இக்கிரகத்தின் விட்டம் 6800 கிலோ மீட்டராகும்.

செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சிறிய சந்திரன்கள் உண்டு. போபோஸ் மற்றும் டைமோஸ் என்று பெயர்.

இக்கிரகத்தின் அதிகபட்ச வெப்பநிலை -29 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை -84 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது.

இக்கிரகத்தில் அடிக்கடி நிகழும் தூசிப்புயலும், குறைவான ஆக்சிஜன் இருப்பதும், நீர் வளம் இல்லாமல் இருப்பதும் மேலும் உயிர் வாழ முடியாத அளவு புற ஊதாக்கதிர்கள் இருப்பதும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கை இயலாததின் காரணிகள் ஆகும்.

வியாழன்

ஜோதிடத்தில் குரு என்று அழைக்கப்படும் கிரகம் வியாழன் ஆகும்.

சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கிரகம் ஜுபிடர் என்ற வியாழன் ஆகும்.

வியாழனின் எடை பூமியின் எடையைக் காட்டிலும் 11 மடங்கு பெரியதாகும். இதன் குறுக்கு விட்டத்தின் அளவு 137000 கிலோ மீட்டர்களாகும். இதன் சுற்றளவு பூமியைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும்.

வியாழனில் 16 நிலாக்கள் உண்டு. கேனிமேடு எனப்படும் நிலா மட்டுமே சூரியக்குடும்பத்திலேயே மிகவும் பெரிய நிலாவாகும்.

ஹைட்ரஜனும் ஹீலியமும் இக்கிரகத்தில் இருக்கின்றன. சூரியனிடமிருந்து இக்கிரகம் பெறும் வெப்பத்தை விட இரு மடங்காக வெளிவிடுகிறது.

வியாழனைச் சுற்றி சனி கிரகத்திற்கு இருப்பதைப் போலவே மங்களான பல வளையங்கள் உண்டு. அந்த வளையங்களுக்கு வான் ஹாலன் பெல்ட்ஸ் என்று பெயர்.

தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி நேரமும் , சூரியனை சுற்றி வர 12 ஆண்டுகளும் எடுத்துக்கொள்கிறது.

வியாழனின் வெப்பநிலை மேற்பகுதியில் 130 டிகிரி சென்டிகிரேட் ஆகவும், நடுப்பகுதியில் 30000 டிகிரி சென்டிகிரேட் ஆகவும் உள்ளது ( இது சூரியனின் மேற்பகுதி வெப்பநிலையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும் ).

சனி

சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கிரகம் சனி ஆகும். இது சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகும். இது ஒரு வாயுக் கிரகமாகும். இக்கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன்(97%) மற்றும் ஹீலியமும்(3%) இருக்கின்றது. மிகவும் குறைவான அளவில் மீத்தேன் மற்றும் அம்மோனியா உள்ளது.

இதன் விட்டம் 270000 கிலோமீட்டராகும். சூரியனுக்கும் சனிக்கும் இடைப்பட்ட தூரம் 142 கோடியே 70 லட்சம் ஆகும்.

தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள பத்தேகால் மணியும், சூரியனை சுற்றிவர 29 வருடம் 5 மாத்ங்களும் எடுத்துக் கொள்கிறது.

சனிக்கிரகத்திற்கு அதிக வளையங்கள் உள்ளன. பல்வேறு அளவுகளுள்ள வளையங்கள் சேர்ந்து பெரிய வளையங்களைப் போல் தோற்றமளிக்கின்றன.

சனி கிரகத்திற்கு 18 பெரிய நிலாக்கள் உண்டு. இதில் டைட்டான் என்று சொல்லப்படும் நிலாவிற்கு தான் மிகப் பெரிய வளிமண்டலம் உள்ளது ( சூரியக்குடும்பத்தில் உள்ள வேறு எந்த நிலாவிற்கும் இந்த சிறப்பு இல்லை). இதில் நைட்ரஜன் அதிக அளவிலும் மீத்தேனும் ஆர்கானும் மிகவும் சிறிதளவிலும் உள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s